ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (28) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
